உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு மேலும் 2 வெள்ளிப் பதக்கங்கள் கிடைத்துள்ளன.
உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி அஜர்பைஜான் தலைநகர் பாகுவில் நடந்து வருகிறது. வெள்ளிக்கிழமை நடந்த பெண்களுக்கான 50 மீட்டர் ரைபிள் (3 நிலை) போட்டியில் டென்மார்க் வீராங்களை ரிக்கி மாங் இஸ்பென், இந்திய வீராங்கனை அஞ்சும் மோட்ஜில் ஆகியோர் முறையே முதல் 2 இடங்களை பிடித்து இறுதிச்சுற்றுக்கு முன்னேறினர்.
இதில் அஞ்சும் முட்கில் 12-16 என்ற கணக்கில் டென்மாா்க்கின் ரிக்கி மேங் இப்சனிடம் வெற்றியை இழந்து வெள்ளிப் பதக்கம் பெற்றாா். உலகக் கோப்பை போட்டிகளில் முட்கில் வென்றிருக்கும் 2ஆவது வெள்ளி இதுவாகும்.
இதையடுத்து, ஆண்கள் அணிகளுக்கான 50 மீட்டர் ரைபிள் (3 நிலை) பிரிவு இறுதிச்சுற்றில் இந்தியாவின் ஸ்வப்னில் குசேல், தீபக் குமாா், கோல்டி குா்ஜா் கூட்டணி 7-17 என்ற புள்ளிகளில் குரோஷியாவிடம் தோல்வியை கண்டு வெள்ளிப் பதக்கத்தை பெற்றனர்.
இந்த தொடரில் இந்தியா 1 தங்கம், 3 வெள்ளியுடன் பதக்கப் பட்டியலில் 3ஆவது இடத்தில் இருக்கிறது.